1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:01 IST)

இனிமே இந்த சோப்பு தான் யூஸ் பண்ணுவேன்... ட்ரெண்டாகும் லாஸ்லியாவின் விளம்பரம்!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்து வருகிறார். அத்துடன் அறிமுக நாயகன் ஒருவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 
இந்நிலையில் தற்போது லாஸ்லியா சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்து கல்லா காட்டியுள்ளார். முதன் முறையாக விளம்பரத்தில் நடித்துள்ள லாஸ்லியாவின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் லாஸ்லியா ஆர்மிஸ்,  " தலைவியே சொல்லிட்டாங்க இனிமேல் இந்த சோப்பு தான் போடுவேன்" என ஒத்த காலில் நிற்கின்றனர். இதோ அந்த வீடியோ..