1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (11:52 IST)

தியேட்டர்கள் திறப்பது எப்போது? மத்திய அரசு தீவிர ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இருப்பினும் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது குறிப்பாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் ஓடத் தொடங்கிவிட்டது என்பதும், நாளை மறுநாள் முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயங்க போகிறது என்பதால் கிட்டத்தட்ட முழு இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசின் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு இந்த பேச்சுவார்த்தையை வரும் எட்டாம் தேதி நடத்த இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த ஆலோசனையில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது