கவர்ச்சி உடையில் புத்தகம் படிக்கும் பிரேமம் கதாநாயகி… இணையத்தில் பரவும் புகைப்படம்!

Last Modified வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:28 IST)

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் பூம்ராவோடு காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் அனுபமா இதுவரை தனது ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் இப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது படுக்கையறையில் இரவு உடையில் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு க்யூட்டான போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :