செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (14:57 IST)

மாமியாரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மருமகனுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

புதுவையில் முகுந்தன் என்ற 24 வயது இளைஞனும் தேவா என்ற 32 வயது நபரும் நண்பர்களாக பழகி வந்தனர் இந்த நிலையில்  தேவாவுக்கு கோமதி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் அதே கோமதியின் மகளை முகுந்தன் காதலித்து வந்தார்.
 
 ஒரு கட்டத்தில் கோமதி மகளுக்கும் முகுந்தனுக்கும் திருமணமான நிலையில் தனது நண்பர் தேவா தனது மனைவியின் அம்மாவுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு வந்தது. 
 
இந்த நிலையில் முகுந்தன் ரம்யாவும் ஜெயிலர் பார்த்துக் கொண்டிருந்தபோது மாமியார் இடமிருந்து திடீரென அழைப்பு வந்துள்ளது. இதனால் படம் பார்ப்பதை பாதியிலே நிறுத்திவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்த போது  கோமதி மற்றும் தேவா மறைந்திருந்து சரமாரியாக கத்தியால் குத்தினர். 
 
இதனால் சம்பவம் இடத்திலேயே முகுந்தன் இறந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran