செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (11:35 IST)

தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை
தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் சமீபத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை
இந்நிலையில் அந்த சம்பவத்தின் துயரம் அடங்குவதற்குள்ளேயே இன்னொரு துயர சம்பவம் நடந்துள்ளது.
 
திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தினமும் குடித்துவிட்டு மனைவி பேபியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பேபியும் அவரது  9-ம் வகுப்பு படிக்கும் மகன் ஹரிஹரனும் கண்டித்து வந்துள்ளனர். இதனை பிரகாஷ் கண்டுகொள்ளாமல் தினமும் குடித்து விட்டு தகராறு செய்துள்ளார்.
 
சம்பவ தினத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார் பிரகாஷ். அப்போது அங்கு வந்த ஹரிஹரன், தனது தந்தையிடம், பல முறை நான் சொல்லியும் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதை பிரகாஷ் கண்டு கொள்ளவில்லை.
 
இதனையடுத்து ஹரிஹரன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை  பூட்டி தற்கொலை செய்துகொண்டார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஹரிஹரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தந்தையின் குடிப்பழக்கதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.