ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (09:20 IST)

கரண்டியால் மகனின் கண்களை நோண்டி எடுத்த தந்தை

மகன் காதலித்த ஆத்திரத்தில், அவரது தந்தை மகனின் கண்களை கரண்டியால் நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70), இவரது மகன் அப்துல் பாகி (22). அப்துல் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
 
இந்நிலையில் அப்துல் தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த விஷயம் அப்துலின் பெற்றோருக்கு தெரியவந்தது.
 
இதனையடுத்து அப்துலின் தந்தையும்,  4 சகோதரர்களும், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்துல் தான் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஒற்றை காலில் நின்றுள்ளார்.
 
இதனால் படுகோபமடைந்த அப்துலின் தந்தையும் 4 சகோதரர்களும், அப்துலை கட்டிப்போட்டு அவரது, கண்களை கரண்டியால் தோண்டி எடுத்தனர். 
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அப்துலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர செயலை செய்த அப்துலின் தந்தையையும், 4 சகோதரர்களும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.