வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (16:27 IST)

தாயின் கழுத்தை இறுக்கிக் கொன்று நாடகமாடிய மகன், மகள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்  அருகேயுள்ள பகுதியில் தாயை மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வாலையார்வாடி  நாடார் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் செல்வம். இவர், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி ஜெயா952). இத்தம்பதியர்க்கு 2 மகள் 1 மகன் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் ராமேஸ்வரத்தில் வசிக்கிறார்.

இரண்டாவது மகள் திவ்யா மற்றும் அவரது கணவர் ராஜூ திவ்யாவின் தம்பி வேல்முருகன் ஆகியோர் நாடார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்த  நிலலையில், சில நாட்களாக தாய் ஜெயாவுக்கும் மகள், மற்றும் மகனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரமடைந்த  திவ்யா, வேல்முருகன், இருவரும் ஜெயாவை கீழே தள்ளிவிட்டனர்.

கீழே சரிந்து விழுந்து தலையில் அடிபட்ட ஜெயாவை திய்வாவும், வேல்முருகனும் கழுதிதை இறுக்கி அவரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இக்கொலையை மறைத்து தாய் ஜெயா இயற்கையாக மறைந்ததாக அவர் கூறியுள்ளனர், பின்னர், அச்சத்தால், விஏஓவிடம் தாயைக் கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டு சரணடைந்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் இதுபற்றி போலீஸில் புகாரளித்தார்,. அதன்படி, திவ்யா(26), வேல் முருகன்(23( ராஜூ(31)  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து  போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.