செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (15:44 IST)

3 கோடி ரூபாய் சொத்தும் சிறுநீரகமும் கொடுத்த பெற்றோர் – பதிலுக்கு மகன் செய்தது என்ன தெரியுமா ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது பெற்றோர் கொடுத்த சொத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களை அனாதையாக விட்டுள்ளார் ஒரு மகன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் சகுந்தலா ஆகியோரது மகன் அருண்குமார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரு சிறுநீரகங்களும் பழுதான நிலையில் அவரது தாய் ஒரு சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார். மேலும் தங்கள் இருப்பில் இருந்து 3 கோடி பணம் மற்றும் தங்கள் சொத்துகள் அனைத்தையும் அவர் பெயருக்கு மாற்றிவிட்டு அவருக்குத் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் திருமணமான பின்பு அருண் தனது பெற்றோரைக் கவனிக்காமல் அனாதையாக விட்டுள்ளார். இதையடுத்து ஆதரவில்லாத அவர்கள் இருவரும் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ந்துள்ளனர். அங்கிருந்த படியே முதியோர் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் படி தன் மகன் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இதை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட கோட்டாட்சியர் தெய்வநாயகி மகன் அருண்குமாரிடம் இருந்து சொத்துகளை மீட்டு மீண்டும் பெற்றோரிடமே கொடுத்தனர். மேலும் மீண்டும் சொத்துகளைக் கேட்டு அவர்களை தொல்லை செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்துள்ளனர்.