பிணமான மருமகன்… சிறையில் தாய் மாமன் - முறையற்ற உறவால் சிதைந்த இரு குடும்பங்கள் !

Last Modified சனி, 9 நவம்பர் 2019 (08:27 IST)
நெல்லையில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தங்கை மகனைக் கொலை செய்துள்ளார் ஆதிமூலம் எனும் நபர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் அவரது தாய் மாரியம்மா நம்பிராஜனை தனது அண்ணன் ஆதிமூலம் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அங்கு தன் மாமாவுடன் சேர்ந்து ஆடுகளை மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளார் நம்பிராஜன்.

அங்கும் ஒழுங்காக இல்லாத நம்பிராஜன் மாமா ஆதிமூலத்தின் மனைவியுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இது எப்படியோ ஆதிமூலத்துக்குத் தெரியவர தன் மனைவியையும் மருமகனையும் கண்டித்துள்ளார். ஆனால் நம்பிராஜன் அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிமூலம் தனது ஆட்டுக்கிடைக்கு அழைத்துச் சென்று நம்பிராஜனை கம்பியால் தாக்கியுள்ளார். இதில் நம்பிராஜன் படுகாயமடைந்து மயக்கமாகியுள்ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தலைமறைவாக இருந்த நம்பிராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தவறான ஒரு உறவால் இரு குடும்பமும் சிதைந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :