திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (09:09 IST)

குழந்தைய குடு.. வீடு புகுந்த ரகளை செய்த ராணுவ வீரர்! – ஊர்க்காரர்களையும் தாக்கியதால் பரபரப்பு!

tamilnadu
மதுரை சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகள் கார்த்திகாராஜி வயது 21.இவருக்கும் சோழவந்தான் சோலை நகரைச் சேர்ந்த ராணுவவீரர் சூரியபிரகாஷ் வயது 26 இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமண நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது.


 
ராணுவவீரர் சூரியபிரகாஷ்தற்போது விடுமுறையில் வந்துள்ளார்.வந்தவர் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சென்று மனைவி கார்த்திகாராஜியை அழைத்து செல்ல கூப்பிட்டு இருக்கிறார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி வர மறுத்ததால் சூரிய பிரகாஷ்   தினசரி காரில் வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சோழவந்தான் செல்வதும் மாலையில் அதே காரில் குழந்தையை தனியாக கொண்டு வந்து விட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்திருக்கிறார் கைக்குழந்தையை பிரிந்து இருந்தால் தாயுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று கருதாத ராணுவ வீரர் ஒரு வாரமாக  தகராறு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து நேற்றைய முன் தினம் கார்த்திகாராஜி சோழவந்தான் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட இராணுவ வீரர் சூரியபிரகாஷ் மனைவி வீட்டுக்குச் சென்று அடித்து உதைத்துள்ளார்.

மேலும் ஆத்திரம்  அடைந்த சூரியபிரகாஷ் மற்றும் இவரது நண்பர்கள் உட்பட இவரது உறவினர்கள் ஆகியோர் கார்த்திகா ராஜிஓட்டுவீட்டை  அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த பிரிட்ஜ் உள்பட பொருட்களை அடித்து உடைத்து உள்ளார்.

அங்கிருந்த கிராம மக்கள் தட்டி கேட்டுள்ளனர். அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார்.இதில் ஐந்து பேர் காயம் ஏற்பட்டதில் பாலா வயது 30என்பவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி கார்த்திகா ராஜி புகார் கொடுத்து ராணுவவீரர் சூரியபிரகாஷை கண்டித்து.இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.