1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (10:06 IST)

கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது - பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதில் கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டுமே சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சார்ஸ் கோவிட் 2, டெல்டா வகை வைரசுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.