வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (14:17 IST)

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
ஆம், அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு... 
 
1. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
2. நோய் தொற்று அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்
3. கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை தொடரும்
4. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது
5. இறுதிச்சடங்கு பங்கேற்பதற்கான கட்டுப்பாடு தொடர்கிறது
6. இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது
7. உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி
8. வேலைவாய்ப்பு எழுத்துத்தேர்வுகளுக்கு அனுமதி
9. தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி.
10. அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடருகிறது
11. திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தடை நீடிக்கப்படுகிறது
12. மாநிலங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும்
13. பள்ளி, கல்லூரிகள் திறக்கத் தடை தொடர்கிறது
15. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகளை, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி தடை நீட்டிப்பு
15. மதுபான கூடங்கள் திறப்பதற்கான தடை நீட்டிப்பு
16. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், உயிரியியல் பூங்காக்கள், நீ்ச்சல் குளங்கள் திறக்க தடை தொடருகிறது