1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:11 IST)

போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் சோசியல் மீடியா பிரபலங்கள்!? – போதைப் பொருள் தடுப்பு பிரிவு எச்சரிக்கை!

Liquor
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் போதைப் பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடாது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.


 
தற்போதைய தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதில் இன்ஃப்ளூயன்சர்கள் எனப்படும் பிரபலமான நபர்களை பலரும் ஃபாலோவ் செய்து வருகின்றனர். அவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தவும் பலர் விரும்புகின்றனர்.

சமீபத்தில் Food Vlog வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளதாக அதை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதை நீக்குமாறு கேட்டுக் கொண்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன், மேலும் போதை ப்ழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்களை வெளியிடக் கூடாது என்றும் சமூக வலைதள இன்ப்ளூயன்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.