1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2023 (07:02 IST)

நண்பர்கள் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால்…. இதை செய்யுங்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டுகோள்!

ஜூன் 26 ஆம் தேதி- நாளை சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் திரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் இடையே பேசினர்.

நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் “இங்கு கூடியிருக்கும் மாணவர்கள் அனைவரும் போதை பழக்கத்தில் ஈடுபடாமல் ஆரோக்யமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் சமூகத்தில் போதை பழக்கம் அதிகமாகி உள்ளது.

உங்களை சுற்றியுள்ளவர்கள் அல்லது நண்பர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தால் அவர்களை மீட்டெடுக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். போதை பொருளுக்கு எதிராக முழுமையாக செயல்பட்ட் சமூக நலனைக் காப்போம்” எனப் பேசினார்.