செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (10:09 IST)

திருமணமான 10 நாட்களில் கணவனை காதலனுடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய மனைவி

திருமணமான 10 நாளிலே கணவனை, காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கடேகல்ல கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு பேஸ்புக் மூலம் சிவா என்ற இளைஞர் நண்பரானார். சிறிது காலத்தில் இவர்களது நட்பு காதலானது.
 
இதனையறிந்த சரஸ்வதியின் பெற்றோர் 10 நாட்களுக்கு முன்பு, கௌரிசங்கர் ராவ் என்பருடன் சரஸ்வதிக்கு திருமணம் செய்து வைத்தனர். இத்திருமணத்தில் சரஸ்வதிக்கு சுத்தமாக ஈடுபாடு இல்லாததால், பேஸ்புக் காதலனோடு சேர்ந்து கணவன் கௌரிசங்கர் ராவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார் சரஸ்வதி.
 
அதன்படி கௌரிசங்கர் ராவிடம் சரஸ்வதி ஷாப்பிங் செல்ல வேண்டும் எனக் கூறி அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்த சரஸ்வதியின் பேஸ்புக் காதலன் சிவா மற்றும் அவரது கூட்டாளிகள், கௌரி சங்கரை படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், கௌரி சங்கரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீஸார் சரஸ்வதியிடம் விசாரித்தனர். ஆனால் சரஸ்வதியோ ஒன்றும் தெரியாதது போல் கபட நாடகம் ஆடியுள்ளார். சரஸ்வதியின் மீது சந்தேகித்த போலீஸார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் செய்த கொலையை ஒப்புக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சரஸ்வதி, அவரது பேஸ்புக் காதலன் சிவா மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இளம்பெண் தன் சுயநலத்திற்காக அப்பாவி இளைஞனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.