1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (10:34 IST)

பாமகவும் பீச் குதிரையும் ஒன்னு; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பாமகவும் பீச் குதிரையும் ஒன்னு; வச்சு செய்யும் நெட்டிசன்கள்
பாமக நிறுவனம் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்ததற்கு ஒருவர் கேலி செய்யும் வகையில் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.


 

 
பாமக நிறுவனர் அவ்வப்போது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது உண்டு. அது சில நேரங்களில் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். அதே நேரம் சில பதிவுகளை நெட்டிசன்கள் கலாய்ப்பது உண்டு. அந்த வகையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து ஒன்றுக்கு ஒருவர் பதிவிட்ட பதில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
 
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி; தமிழக அரசின் உருப்படியான நடவடிக்கை: அன்புமணிக்கு வெற்றி! இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர் பீச் குதிரையும் பாமகவும் ஒன்னு. எங்க சுத்துனாலும் அன்புமணிகிட்ட வந்து நின்னுடும். 
 
தமிழக அரசு சார்ப்பில் எந்த நலதிட்டம் கொண்டு வரப்பட்டலும் அது அன்புமணியால்தான் நடைப்பெற்றது என கூறிவருகின்றனர் என்று கூறுவது போல் பதிவு உள்ளது.