திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (21:59 IST)

இடி மின்னால் சாம்பலான பட்டாஸ் தொழிற்சாலை: சிவகாசியில் பரபரப்பு

இடி மின்னால் சாம்பலான பட்டாஸ் தொழிற்சாலை: சிவகாசியில் பரபரப்பு
இடி மின்னல் காரணமாக சிவகாசி பட்டாசு ஆலை ஒன்று எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிவகாசி அருகே மாரனேரி என்ற பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இன்று மாலை அந்த பட்டாசு ஆலை அருகே திடீரென இடி மின்னல் ஏற்பட்டது இதனை அடுத்து இடி மின்னல் தாக்கியதால் ஸ்ரீனிவாசன் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது 
 
அந்த நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் இந்த சம்பவத்தில் பட்டாசு ஆலையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்