செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:01 IST)

குத்தகைக்குள் உள் குத்தகை.. அளவுக்கு அதிகமான பணியாளர்கள்! – சிவகாசி பட்டாசு விபத்து!

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளன.

சிவகாசி அருகே சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஏற்கனவே குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஆலை 4 பெருக்கு உள் குத்தகைக்கு அளிக்கப்பட்டதும், அளவுக்கு அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான ஆலை உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.