1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (07:42 IST)

சுற்றுலா செல்பவர்களுக்கு என மொபைல் ஆப்: முதல்வர் பழனிசாமி

சுற்றுலா செல்பவர்களுக்க்கு என மொபைல் ஆப்: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை ஒருங்கிணைத்து அனைத்து விவரங்களும் அடங்கிய மொபைல் ஆப் ஒன்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவங்கி வைத்தார். 
 
இந்த மொபைல் செயலியில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், தங்கும் விடுதிகள் குறித்த விபரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் நடக்கும் விழாக்கள் ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் 
 
மேலும் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யவும் இந்த மொபைல் செயலி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் செயலி சுற்றுலா செல்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கும் இந்த மொபைல் செயலி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பல சுற்றுலா தளங்களை தமிழக மக்களை அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள், செல்ல வேண்டிய இடங்கள், அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று குறிப்புகள் ஆகியவற்றை இந்த மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த மொபைலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது
 
Tamilnadu Tourism' என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம்