திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:30 IST)

அதிமுக வார்டு உறுப்பினர்களிடையே கைகலப்பு: சிவகெங்கையில் பரபரப்பு!

அதிமுக வார்டு உறுப்பினர்களிடையே கைகலப்பு: சிவகெங்கையில் பரபரப்பு!
சிவகங்கையில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர் 
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தின் இடையே திடீரென அதிமுக வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரன் மற்றும் மனோகரன் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் திடீரென முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கலகத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு இருந்த நிலையில் சக உறுப்பினர்கள் இருவரையும் விலக்கி விட்டு, இந்த சண்டையை நிறுத்த முயற்சித்தனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வார்டு உறுப்பினர் மகேஸ்வரன் திடீரென நாற்காலியை தூக்கி அடிக்க கை ஓங்கிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது