1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (14:15 IST)

5 ரூவா குறைக்கிறதா சொல்லிட்டு 3 ரூவாதான் குறைச்சிருக்காங்க – அதிமுக புகார்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த அறிவிப்புக்கு அதிமுக அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக “திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை ரூ.4 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை” என்று கூறியுள்ளது.