முருகனோட அப்பா சிவன் கிடையாது; தம்பிகளுக்கு விளக்கிய சீமான்!
நாம் தமிழர் கட்சி கூட்டம் ஒன்றில் முருகனின் அப்பா சிவன் கிடையாது என சீமான் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”முருகனுடைய தந்தை சிவன் கிடையாது. இருவரும் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவர்கள். தமிழர்களின் தெய்வமான கொற்றவைதான் பார்வதி தேவியாக மாற்றப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் சேர்த்து சிவனும், முருகனும் தந்தை-மகன் என கதைக்கட்டி விட்டார்கள்” என கூறியுள்ளார்.
மேலும் இணையதளங்களில் தேவையற்றவற்றை பேச வேண்டாம் என தம்பிகளுக்கு அட்வைஸ் செய்த சீமான், அவர்கள் தவறாக பதிவிட்டால் அதற்கு தான் பதிலளிக்க முழிக்க வேண்டியிருப்பதாக கூறியுள்ளார்.