செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (11:47 IST)

பச்சை துண்டு போடவும் ஒரு தகுதி வேணும்! – ஸ்டாலினை வெளுத்த எடப்பாடியார்!

பச்சை துண்டு போட்டால் விவசாயி என்று நினைப்பா என விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க மசோதா நிறைவேற்றிய முதல்வர் விவசாய சங்கத்தினருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார். அதில் விவசாயிகளை போலவே பச்சை துண்டு அணிந்து கொண்டிருந்தார். அதை விமர்சித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ”பச்சை துண்டு போட்டுக் கொண்டால் விவசாயி என்று அர்த்தமா?” என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் இன்று தஞ்சையில் அதிமுக பிரமுகர் வைத்திலிங்கம் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர் “நான் பிறப்பாலேயே விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயம் பார்த்து விவசாயியாக வாழ்ந்தவன். ஆனால் நான் விவசாயி என்பதில் அவர்களுக்கு என்ன பொறாமை என தெரியவில்லை. பச்சை துண்டு போட்டால் விவசாயியா என ஸ்டாலின் கேட்கிறார். ஆனால் அந்த பச்சை துண்டு போடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். விவசாயியான என்னை நீங்கள் வெல்ல முடியாது” என்று பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.