1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:16 IST)

மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Subramanian
மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது/ இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என டெல்லியில் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
எய்ம்ஸ் மருத்துவமனை போன்று அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்