வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (11:02 IST)

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.! ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் அதிர்ச்சி.!!

Gold
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், திடீரென தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. 

நேற்று (செப்.13) தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. தொடர்ந்து இன்று (செப்.14) தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ள நிலையில்,  இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1280 அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,865-க்கு விற்பனையாகிறது. அதேபோல், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.54,920-க்கு விற்பனையாகிறது. 

 
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.97 க்கும், ஒரு கிலோ ரூ.97 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.