திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (09:23 IST)

ஓபிஎஸ் உடன் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு..!

ஓபிஎஸ் உடன் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 
 
அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் ஓபிஎஸ் அணிக்கும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பேட்டி அளித்தபோது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக தெரிவித்தார். 
 
மேலும் இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் நானும் இணைந்து பயணம் செய்வோம் என்றும் கூறியுள்ளார் அது மட்டும் இன்றி பாஜக கூட்டணியில் தங்கள் கட்சி இல்லை என்பதையும் அவர் உறுதி செய்து உள்ளார்.

Edited by Siva