1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (11:39 IST)

கூட்டணியில் இல்ல.. ஆனா பாஜக நடைபயணத்திற்கு ஆதரவு! – தேமுதிக அறிவிப்பு!

இன்று நடைபெற உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் மாநிலம் தழுவிய நடைபயணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தொடங்க உள்ள பாத யாத்திரை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக சார்பில் மரியாதை நிமித்தமாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்ட தேமுதிகவினர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

அண்ணாமலையின் நடைபயணம் வெற்றியடைய அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K