1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sexual complaint..! Another case against Malayalam actor Baburaj.!

பாலியல் புகார்..! மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு வழக்கு.!

Baburaj
கேரள பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளித்த புகாரின்பேரில், மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
முன்னதாக நடிகர் பாபுராஜ் மீது திரைத் துறையைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019ம் ஆண்டு நடிகர் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அடிமாலியில் உள்ள ரிசார்ட் மற்றும் ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அடிமாலி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வாக்குமூலத்தை பதிவு செய்த இடுக்கி மாவட்டம் அடிமாலி காவல்துறை வழக்கு பதிவு செய்து தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

முன்னதாக, நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
Audi கார் நிறுவன தலைவர் 700 அடி பள்ளத்தில் விழுந்து மரணம்! - மலையேற்றத்தில் நடந்த சோகம்!