1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:28 IST)

பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு.. போலீசார் அதிரடி..!

கோவையில் முன் அனுமதி இன்றி பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டியை நடத்தியது. 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு என விளம்பரம் செய்யப்பட்டது.
 
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த கட்டுங்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சம்பவத்தன்று நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
 
இந்த பிரியாணி போட்டியில் 2ஆ,  இடம் பிடித்த கணேஷ மூர்த்தி தனது ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
Edited by Siva