புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (12:59 IST)

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்..! 500 பேர் சிக்குவர் - நடிகை ரேகா நாயர்..!!

Rekha Nair
தமிழ் சினிமாவில் பாலியல் புகார் தொடர்பான அறிக்கை வெளியானால் சுமார் 500 பேருக்கு மேல் சிக்குவார்கள் என ரேகா நாயர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். 
 
மேலும் கேரளாவை போல தமிழுலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருக்கிறதா என்பது குறித்து கண்டறிய கமிட்டி அமைக்க வேண்டும் என்று தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில்  நடிகை ரேகா நாயர், மலையாள சினிமாவில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,  பாலியல் தொல்லை என்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை மற்ற எல்லா மொழித்துறையிலும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் கூட லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளது என்றும் மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைபோல தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள் என்றும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 
இதுபோன்ற பிரச்சனைகள் பற்றி நடிகைகள் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட நடிகர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாகவும் நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.