"பாலியல் வழக்கில்" சிக்கிய தாசில்தார் தலைமறைவு
"பாலியல் வழக்கில்" சிக்கிய தாசில்தார் தலைமறைவு
மேட்டூர் அருகே விதவையை பாலியல் பலாத்காரம் செய்த தனிதாசில்தார் மீது போலீசார் வழக்கு செய்தனர்.
சேலம் சமூகநலத் திட்ட தனிதாசில்தார் மீது, மேட்டூர் போலீசார், பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் எலிகரடுவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி(33)யின் கணவர் சின்னண்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இதனால், கடந்த 2010 ஆம்ல் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, அவரையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இதனால், கிருஷ்ணவேணி, மகனுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், தனக்கு வேலை வேண்டி, சேலம் சமூகநலத் திட்ட தனி தாசில்தார் சின்னதம்பியை தொடர்பு கொண்டார்.
தனது ஆசைக்கு இணங்கினால், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அனுபவித்துள்ளார். பின்பு போலி ஆவணம் மூலம் சேலம் ஐடிஐயில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.போலி ஆவணம் மூலம் பணியில் சேர்ந்த கிருஷ்ணவேணி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மேட்டூர் காவல் நிலையத்தில், கிருஷ்ணவேணி கொடுத்த புகார் மனுவில், கடந்த, 2015 ஜூன் மாதம் சின்ன தம்பி, எனது வீட்டுக்கு வந்து, என்னையும், மகனையும் கொலை செய்துவிடுவதாக கூறி, என்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், எனது ஜெயலினையும் பறித்துச் சென்றார் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, தாசில்தார் சின்னதம்பி மீது, கொலை மிரட்டல், பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
