1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (17:49 IST)

இன்று இரவுக்குள் மின் தடை சீரமைக்கப்படும்; அமைச்சர் செந்தில்பாலாஜி!

இன்று இரவுக்குள் மின் தடைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் மூன்று நாள் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக மந்தைவெளியில் உள்ள பகுதியில் உள்ள மக்கள் மூன்று நாட்களாக தங்களது மின்சாரம் இல்லை என கூறிய வீடியோக்கள் ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாக உள்ளன 
 
இந்த நிலையில் மின்தடை ஏற்பட்டு உள்ள இடங்களில் இன்று இரவுக்குள் சீரமைக்கப்படும் என்றும் மழையின் அளவு அதிகமாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக இருப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இதனையடுத்து இன்று இரவுக்குள் மின் தடை சரிசெய்யப்பட்டு நாளை முதல் சீரான மின்சாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது