வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (16:33 IST)

செந்தில் கணேஷுக்கு அரசியல் பதிவு தேவையா? - பேஸ்புக்கில் சர்ச்சை

செந்தில் கணேஷுக்கு அரசியல் பதிவு தேவையா? - பேஸ்புக்கில் சர்ச்சை
விஜய் தொலைக்காட்சி நாட்டுப்புறப்பாடகர் செந்தில் கணேஷ் தனது முகநூலில் போட்ட பதிவு திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
விஜய் தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமான செந்தில் ராஜலஷ்மி தம்பதியினர் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் மறைவிற்கு தங்களின் முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
செந்தில் கணேஷுக்கு அரசியல் பதிவு தேவையா? - பேஸ்புக்கில் சர்ச்சை

 
அந்த இரங்கல் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வரிகள் திமுகவினை நேரிடையாக சாடுவது போலவே அமைந்துள்ளது.  இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்போதுதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற பதிவு இவருக்கு தேவையான என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.