புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (12:05 IST)

நெருங்கும் தேர்தல் திமுகவிற்கு ஃபண்டிங்? ஸ்டாலின் – ரத்தன் டாட்டா சந்திப்பு!!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா ஆகியோர் நேற்று சந்தித்துக்கொண்டனர். ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.


சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் டாட குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மற்றும் அக்குழுமத்தின் தற்போதைய தலைவரான சந்திரசேகரும் இருந்தனர்.

இந்த சந்திப்பில் இந்தியாவின் தொழில் நிலவரம் குறித்து பேசிக்கொண்டதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதாவது, மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தால் நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா எனவும், முதலீட்டாளர்கள் மாநட்டின் நோக்கம் எட்டப்பட்டிருக்கிறதா என்றும் பேசப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்டாலின், தொழில் துறையில் அனைவருக்கும் முன்னோடியாக விலங்கும் திரு ரத்தன் டாட்டா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவர்களது சந்திப்பு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.