தொடர்புடைய செய்திகள்
- 2026 ல் பெட்ரோல்,டீசல் இலவசம் என்று திமுக சொன்னாலும் சொல்வார்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை!
- செந்தில் பாலாஜி வழக்கு..! 28-ல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!
- IAM WAITING.. அண்ணாமலை போட்டி குறித்து எக்ஸ் தளத்தில் அதிமுக வேட்பாளர்..!
- கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி..!" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
- கோவையில் அண்ணாமலை போட்டியிடுவது பற்றி வானதி சீனிவாசன் பேட்டி
செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தால் அண்ணாமலைக்கு சவாலாக இருக்குமா?
கோவை தொகுதியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தால் அவரது வெற்றி சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சில மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில் அவரது ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் 280 நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார் என்றும் தினமும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்றும் மனுதாரருக்கு எதிரான எந்த விதமான உண்மையான ஆதாரங்களும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் கோவை சென்று அண்ணாமலையை தோற்கடிக்கும் வகையில் தீவிரமாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
இதனால் அண்ணாமலை வெற்றி சவால் ஆகிவிடும் என்று கூறப்பட்டாலும் செந்தில் பாலாஜி அதற்கு முன் ஜாமீனில் வெளி வருவாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran
