வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (16:12 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவருக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். 
 
காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் இன்னும் வலி இருப்பதாக பதில் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran