1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (16:28 IST)

செந்தில் பாலாஜியின் காவல் 23வது முறையாக நீட்டிப்பு..! மார்ச் 6 வரை நீட்டித்து உத்தரவு..!

Senthil Balaji
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 6 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
 
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் வாங்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர்  செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.
 
இதை நோய் பிரச்சினை ஏற்பட்டதால் ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்றைய தினம் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் செந்தில் பாலாஜி அதிக மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.