செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அதிரடி உத்தரவு..!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை ஜூலை 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.
சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் முதல்வருக்கும் ஆளுநருக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
Edited by Mahendran