400 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதும் 52 ஆயிரத்தைத் தாண்டியது சென்செக்ஸ் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது பங்குச் சந்தை இன்று திடீரென 400 புள்ளிகளுக்கும் மேல் இறங்கியுள்ளது
இன்றைய பங்குச்சந்தை நிலவரத்தின்படி சென்செக்ஸ் 455 புள்ளிகள் இறங்கி 49 ஆயிரத்து 476 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. அதே போல் நிப்டி கிட்டத்தட்ட 100 புள்ளிகள் இறங்கி உள்ளது என்பதும் 14,600 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பங்குச்சந்தை இறங்கி வருவதாகவும் இதனை அடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
சென்செக்ஸ் 50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்து தங்களுடைய முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதாகவும், இதனால் பங்குச்சந்தை இறங்கி வருவதாகவும் கூறப்படுகிறது