திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (10:16 IST)

700 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் குறிப்பாக கடந்த வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 2000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். பங்குச்சந்தை இதே ரீதியில் குறைந்து கொண்டே போனால் முதலீட்டாளர்களின் பெரும் நஷ்டம் அடைவார்கள் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையில் இன்று பங்குவர்த்தகம் தொடக்கத்திலேயே உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு பங்கு வர்த்தகம் தொடங்கிய உடன் 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் தற்போது 700 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகி வருகிறது
 
சற்றுமுன் வரை 49800 என்ற நிலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பதும் நிப்டி சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 35330 என்ற நிலையில் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் முதல் நாளே பங்கு சந்தை 700 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது