அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு!.. தலைமை செயலகத்தில் பரபரப்பு...
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பல மணி நேரங்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக திமுகவினர் புகார் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இரண்டு வெட்டுக்கும் இடையேதான் போட்டி.. ஒன்று மின் வெட்டு.. மற்றொன்று அரிவால் வெட்டு என திமுக தலைவர் முக ஸ்டாலினை நக்கலாக சொல்லியிருந்தார்..
சென்னையில் சில இடங்களில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாக. பொது மக்களே சாலையில் இறங்கி போராடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
ஒருபக்கம் மின்வெட்டு பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் தவெக அரசும் இறங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சில அமைச்சர்கள் சில நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு மின்வெட்டு ஏற்பட்டது.. இதையும் திமுக விமர்சித்தது..
இந்நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களின் அறை அமைந்துள்ள தளம் முழுவதுதிலும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், அமைச்சர்களின் அறைகள் இருளில் மூழ்கின. ஒரு மணி நேரமாக அங்கு மின்வெட்டு இருந்தது. உடனடியாக அதிகாரிகள் மின்வெட்டு எதனால் ஏற்பட்டது என ஆய்வு செய்தனர். இந்த விவகாரத்தையும் திமுக கையில் எடுத்து விமர்சித்து வருகிறது.