செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (13:25 IST)

கனடாவில் புதிய விசா விதிமுறைகள் அமல்.. இந்திய மாணவர்களுக்கு சிக்கலா?

Canada Visa
கனடாவில் அதிக அளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் வகையில், விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் இருந்து கனடாவில் வசிக்கும் நபர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
வெளிநாடுகளில் இருந்து கனடாவில் தங்கி கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் விசாவை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரத்தை கனடா எல்லைப்படை அதிகாரிகளுக்கு வழங்கி, அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் விசா காலம் நிறைவடைந்த பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று நினைத்தால், அவரது விசா காலம் முடிவுக்கு முன்பே அதனை ரத்து செய்ய அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
தற்காலிக விசா பெற்று தங்கும் நபர்களின் விசாக்களையும் நிராகரிக்க கனடா எல்லைப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் காரணமாக, இந்திய மாணவர்கள் சிக்கலில் உள்ளதாக தெரிகிறது. கனடாவில் தற்போது சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் இருந்து கனடா செல்லும் பலரும் சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே தங்கி கொள்கிறார்கள் என்றும், புதிய விதிமுறைகளின் படி விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், ஏராளமான இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran