1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sellur raju comment on rajini entring to polytics

ரஜினிகாந்த் ஒரு வியாபாரி - தெர்மாக்கோல் செல்லூர் ராஜூ கருத்து

Sellur raju
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதுபற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி கருத்து பெரும்பாலான அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் பாஜகவில் இணையவேண்டும் என பல அமித்ஷா, நிதின்கட்காரி உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ “எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்தவர்கள் என்னவானார்கள் என எல்லோருக்கும் தெரியும். ரஜினிகாந்த் பேசியதுபற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவர் கூறுவது போல் சிஸ்டம் கெட்டுப்போகவில்லை. வலிமையான மக்கள் இயக்கமாக அதிமுக திகழ்கிறது.
 
ரஜினி ஒரு சிறந்த வியாபாரி. அவரின் படம் ஓட வேண்டும் என்பதற்காக இன்று ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர்”.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
சங்கமித்ராவில் ஜெயம் ரவி யார்?