1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (17:39 IST)

முன்னாள் முதல்வர் மகன் திடீர் நீக்கம்: நடிகை ரம்யாவை நியமனம் செய்த ராகுல்காந்தி

சிம்புவுடன் குத்து, தனுஷுடன் பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா. இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வரும் நிலையில் தற்போது அவரை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தலைவராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமனம் செய்துள்ளார்.



 
 
இந்த பதவியில் இதற்கு முன்னர் அரியானா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவின் மகனுமான தீபந்தர் சிங் ஹூடா இருந்து வந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடிகை ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு பாஜகவை சமாளிக்கவே ராகுல்காந்தி இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜகவுக்கு பதிலடி கொடுக்க ரம்யா தலைமையிலான டீம் தான் சரியானது என்று அக்கட்சியின் கர்நாடக தலைவர்கள் கூறுகின்றனர்.