புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (09:59 IST)

ஒரே வீட்டில் வாக்கு சேகரிக்கச் சென்ற பொன்முடி -செல்லூர் ராஜு: கலகலப்பான உரையாடல்..!

sellur raju ponmudi
ஒரே வீட்டில் வாக்கு சேகரிக்கச் சென்ற பொன்முடி -செல்லூர் ராஜு: கலகலப்பான உரையாடல்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பணியில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. குறிப்பாக திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் முற்றுகையிட்டு உள்ளனர் என்பதும் வீடு வீடாக சென்று அவர்கள் வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு வீட்டில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வீட்டிற்கு தற்செயலாக அமைச்சர் பொன்முடி வந்தார். ஒரே வீட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் இந்நாள் அமைச்சர் பொன்முடியாக இருவரும் வாக்கு கேட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து பொன்முடி மற்றும் செல்லூர் ராஜு ஆகிய இருவரும் கலகலப்பாக பேசிக்கொண்ட காட்சியின் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றனர்.
 
Edited by Siva