ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேலை விற்பனை படு ஜோர்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்ட பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.