வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (15:48 IST)

தாம்பரம் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள்..7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டாரா?

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
 
வங்கதேச எல்லையில் கைதான சேலையூர் எஸ்.ஐ ஜான் செல்வராஜ் என்பவர் 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டுள்ளார் என்றும், அவரிடம் கட்டுக்கட்டாக இந்திய பணமும் வைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் அவர் போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் சேலையூர் எஸ்.ஐ ஜான் செல்வராஜ் ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி 10 ஆண்டுகள் பணியில் இல்லாமல் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva