திங்கள், 12 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 11 டிசம்பர் 2021 (00:22 IST)

கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

ஸ்பெயினின் தெற்குப்பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 68 மருத்துவ ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அறுபத்தி எட்டு பேரும் அங்குள்ள பிராந்திய மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் அல்லது செவிலியராகப் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சுமார் 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது இவர்கள் யாருக்கும் குரன் அறிகுறிகள் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.