திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:08 IST)

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் ஏமாந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையும், மக்கள் தடுப்பூசி பற்றாக்குறையால் ஆபத்தில் உள்ளதையும் கருத்தில் கொண்டு உடனடியாக கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.