1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (07:03 IST)

கமல் கட்சியுடன் கூட்டணி இல்லை: அதிகாரபூர்வமாக அறிவித்த சீமான்!

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியை அடுத்து மூன்றாவதாக ஒரு கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, குறிப்பாக மூன்றாவது கூட்டணிக்கு கமல்ஹாசன் தலைமை வகிப்பார் என்றும் அந்த கூட்டணியில் சீமான் கட்சி, ஒவைசி கட்சி உள்பட ஒருசில கட்சிகள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
 
அதுமட்டுமன்றி அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி அடைந்தால் அந்த கட்சிகள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி கமல் தலைமையிலான கூட்டணியில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான், கமல் கட்சி உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தங்களுடைய கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
 
கமல் ரஜினி ஆகியோர் கூட்டணி சேர்ந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது